நாடே உயிர் காக்கப் வைரஸை எதிர்த்து போராடி வரும் நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், முக ஸ்டாலின் ட்வீட்.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை விரைவாக பரிசோதனை மேற்கொள்ள இந்தியா, சீனாவிடம் இருந்து 6.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை ஆர்டர் செய்து, அதில் முதற்கட்டமாக 3 லட்சம் ரேபிட் கிட்கள் இந்தியாவிற்கு வந்திருந்தது. பின்னர் ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து கொடுத்தது. அதன்படி மத்திய அரசு, தமிழகத்திற்கு ஒதுக்கிய 12,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்று தமிழக வந்தடைந்தன. இதனிடையே தமிழக அரசு சீனாவில் நேரடியாக ஆர்டர் செய்திருந்த 24,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் நேற்று வந்தன. இதனால் தற்போது தமிழகத்தில் மொத்தம் 36,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் இருக்கின்றது.
இந்நிலையில், தமிழக அரசு சீனாவில் நேரடியாக ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கருவிகள் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், கொரோனா பரிசோதனைக் கருவிகள் எத்தனை? என்ன விலை? மற்றும் எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல், தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் குறிப்பாக நாடே உயிர் காக்கப் வைரஸை எதிர்த்து போராடி வரும் நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…