சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி -சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ் தரேஸ் அகமது நியமனம்!
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறப்பு அதிகாரியாக தரேஸ் அகமது ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தில் வருகின்ற ஜூலை மாதம் 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.இதில் 190 நாடுகளை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில்,சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறப்பு அதிகாரியாக தரேஸ் அகமது ஐ.ஏ.எஸ் அவர்களை தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு நியமித்து உள்ளார். மேலும்,இவர் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகளை கவனிப்பார் என்று தமிழக இறையன்பு அவர்கள் தெரிவித்துள்ளார்.