செஸ் ஒலிம்பியாட் அறிக்கை வாசிப்பு – இயக்குனர் பரத் சிங் சவுகான்
செஸ் போட்டி குறித்த அறிக்கையை போட்டி இயக்குனர் பரத் சிங் சவுகான் வாசித்தார்.
மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெறுகிறது. இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவில், செஸ் போட்டி குறித்த அறிக்கையை போட்டி இயக்குனர் பரத் சிங் சவுகான் வாசித்தார். அப்போது அனைத்து வீரர்களும் பத்திரமாக சொந்த ஊர் திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.