முதல் முறையாக தமிழகத்தில் “செஸ் ஒலிம்பியாட்” போட்டி – முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

Default Image

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் “செஸ் ஒலிம்பியாட்” போட்டியானது சர்வதேச அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் மிக முக்கியமானதாக உள்ளது.

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக சர்வதேச போட்டிகளை பல்வேறு விளையாட்டு அமைப்புகள் ரத்து செய்து வரும் நிலையில்,ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்த நடப்பு ஆண்டிற்கான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியகளும் ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து,செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றது.இந்நிலையில்,44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தேசமாக ஜூலை 26 ஆம் தேதி இப்போட்டிகள் தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது, இபோட்டியில்,சுமார் 200 நாடுகளில் இருந்து 2000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும்,சென்னையில் ‛செஸ் ஒலிம்பியாட்-2022′ போட்டியை நடத்துவதில் தமிழகம் பெருமை கொள்வதாகவும்,இப்போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை வரவேற்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:

“இந்தியாவின் செஸ் தலைநகரம் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது! தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம்! உலகெங்கிலும் உள்ள அனைத்து மன்னர்களையும் ராணிகளையும் சென்னை அன்புடன் வரவேற்கிறது”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்