செஸ் ஒலிம்பியாட் – தலைமை செயலாளர் ஆலோசனை

Default Image

இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த பணிகள் குறித்து நேற்று தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக செய்ய வேண்டிய பணிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்