#BREAKING : செஸ் ஒலிம்பியாட் 4 – வது சுற்றில் இந்திய மகளிர் “பி” அணி வெற்றி!!

சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 4 – வது சுற்றில் இத்தாலியை வீழ்த்தி இந்திய மகளிர் “பி” அணி வெற்றி பெற்றுள்ளது. பெண்களுக்கான போட்டியில் இந்திய அணிகள் தொடர்ந்து  வெற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஜார்ஜியா அணிக்கு எதிரான போட்டியில் 42-வது நகர்த்தலில் ஜார்ஜியா அணி வீராங்கனை பட்சியாசிவிலியை வீழ்த்தி நந்திதா வெற்றி பெற்றுள்ளார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய வந்திகா அகர்வால் 43-வது நகர்தலில் எஸ்டோனியா வீராங்கனை நார்வாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா ‘பி’ மகளிர் அணி இந்தோனேசியாவை 3-1 என்ற கணக்கில் வென்றது. வந்திகா அகர்வால் – ஐரின் கரிஷ்மா சுகந்தரை வென்றார், பத்மினி ரௌட் அவுலியா – மதீனா வார்தாவை சமன் செய்தார், சௌமியா சுவாமிநாதன் – ஃபரிஹா மரிரோவை வென்றார், மேரி ஆன் கோம்ஸ் அனஸ்தேசியா – சித்ரா தேவி அர்தியானியுடன் சமன் செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - TN Rain
06.11.2024 Power Cut Details
VCK Leader Thirumavalavan - Tamilnadu CM MK Stalin
yellow alert rain
VCK Leader Thirumavalavan - TVK Leader Vijay
Sunil Gavaskar
Bengaluru