செஸ் ஒலிம்பியாட் நிறைவு.. காவலர்களுக்கு பிரியாணி விருந்து.! டிஜிபி அசத்தல்.!
செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியதில் பெரிதும் உதவிய காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, டிஜிபி சைலேந்திர பாபு காவலர்களுக்கு பிரியாணி விருந்து அளித்தார்.
கடந்தமாதம் ஜூலை 28ஆம் தேதி சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி வெகு கோலாகலமாக தொடங்கி , கடந்த 10ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்த விழாவில் பல்வேறு நாட்டு செஸ் வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்கள், போட்டி நடைபெற்ற இடங்கள், மற்ற பொது இடங்கள், அரசியல் பிரபலங்கள், விஐபிகளின் பந்தோபஸ்து என 1000க்கும் மேற்பட்ட காவலர்கள் தங்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர்.
இந்த செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியதில் பெரிதும் உதவிய காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, டிஜிபி சைலேந்திர பாபு, செஸ் ஒலிம்பியாட்டில் வேலை பார்த்த காவலர்களுக்கு மட்டன் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.
அந்த விருந்தில், காவலர்களுடன் அமர்ந்து டிஜிபி சைலேந்திர பாபுவும் மட்டன் பிரியாணி சாப்பிட்டார். இந்த விருந்து காவலர்களுக்கு நிச்சயம் ஓர் சிறிய உந்து சக்தியாக இருக்கும் என கூறப்படுகிறது.