சேலத்தில் சதுரங்கவேட்டை திரைப்பட பாணியில் மக்களின் ஆசையை தூண்டி மோசடி…! தம்பதியை கைது செய்த போலீசார் ..!
சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் இவரது மனைவி இந்துமதி. இவர்கள் மத்திய பேருந்து நிலையத்தில் அருகே ஒரு அடுக்கு மாடியில் நிறுவனம் ஒன்றைநடத்தி வருகின்றனர். தனது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 100 நாள்களில் பணம் இரட்டிப்பாகும் என கூறினர்.
மேலும் தங்கள் நிறுவன தயாரிப்பு பொருள்களான ஊறுகாய் , எண்ணெய் போன்றவற்றிற்கு டீலர்ஷிப் மற்றும் இதன் மூலம் வெளிநாட்டு ஏற்றுமதி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என மக்களிடம் ஆசை அறிவிப்புகளை அறிவித்துள்ளனர்.
மணிவண்ணனின் பேச்சைக் கேட்டு பலர் முதலீடு செய்துள்ளனர். தொடக்கத்தில் மக்களை நம்ப வைப்பதற்காக சரியாக பணத்தை கொடுத்துள்ளார். இதனால் மணிவண்ணனை நம்பி பலர் முதலீடு செய்து உள்ளனர். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தந்த தொழில் அங்கே நடத்தி வந்துள்ளார். பின்னர் செல்ல செல்ல பணம் கொடுத்தவர்களுக்கு சரியாக பணம் கொடுக்காமல் மணிவண்ணன் வந்துள்ளார்.
இதனால் சுதாரித்துக்கொண்ட பெண் ஒருவர் 2018-ம் ஆண்டு சேலம் மாநகர காவல் புகார் கொடுத்துள்ளார். பின்னர் மணிவண்ணன் மீது புகார்கள் அதிகரிக்கத் தொடங்கின. இதைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து மணிவண்ணனை கண்காணித்து வந்தார் குற்றப்பிரிவு போலீசார் அவரையும் , அவரது மனைவி இந்துமதி இருவரையும் கைது செய்தனர்.
போலீசார் அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் பணமும் , 10 சவரன் நகையும் , 2 சொகுசு கார்கள் , லேப்டாப் மற்றும் 13 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் இவர்களிடம் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதலீடு செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.