சேப்பாக்கம் – திருவெல்லிகோணி தொகுதி காலியானதாக அறிவிப்பு
சேப்பாக்கம் – திருவெல்லிகோணி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் சிறுநீரகம் மற்றும் இதைய பிரச்சனை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வந்தனர்.ஆனால் ஜூன் 10-ஆம் தேதி ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானதை அடுத்து சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி காலியாக இருப்பதாக பேரவை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.