சென்னையில் குடிநீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் நிறுத்தப்பட்டது…!!!
கடந்த 22ம் தேதி சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. ஆந்திராவின் பாசனத்திற்காக தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கிருஷ்ணா நதியிலிருந்து 1.65 டிஎம்சி தண்ணீர் சென்னைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.