சென்னையில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்… மெரினா கடற்கரை மூடல்!

வண்ண ஒளிகளால் ஜொலிக்கும் சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் தயாராகி வருகிறது.

marina Beach
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மெரினா கடற்கரைக்கு செல்லும் பாதைகள் முழுமையாக மூடப்பட்டது.

மெரினா கடற்கரை முழுவதுமாக காவல்துறை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, மெரினா கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட துவங்கியுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக டி.ஜி.பி. அலுவலகம் அருகே, தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆங்கில புத்தாண்டை வரவேற்பதற்காக சென்னை பெசண்ட் நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்துள்ளனர்.

அவர்களை கண்காணிப்பத்ற்கு 300க்கும் மேற்பட்ட சென்னை மாநகர போக்குவரத்து காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் உட்புறச் சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்