சென்னையில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்… மெரினா கடற்கரை மூடல்!
வண்ண ஒளிகளால் ஜொலிக்கும் சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் தயாராகி வருகிறது.
மெரினா கடற்கரை முழுவதுமாக காவல்துறை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, மெரினா கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட துவங்கியுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக டி.ஜி.பி. அலுவலகம் அருகே, தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆங்கில புத்தாண்டை வரவேற்பதற்காக சென்னை பெசண்ட் நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்துள்ளனர்.
அவர்களை கண்காணிப்பத்ற்கு 300க்கும் மேற்பட்ட சென்னை மாநகர போக்குவரத்து காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் உட்புறச் சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.