GCCBudget2023 Live : சிங்காரசென்னை 2.0..! 26 நீர் ஊற்றுகள் அமைக்க ரூ.1.29 கோடி ஒதுக்கீடு..!
- 2023-2024-ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சிங்காரசென்னை 2.0 நிதியின் கீழ் பல்வேறு மண்டலங்களில் 26 நீர் ஊற்றுகள் அமைக்க ரூ.1.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்களை விடுமுறை நாட்களில்,கல்விச் சுற்றுலாவாக நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இதற்காக ரூ.20 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- அனைத்து தொடக்க,நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துப் சென்னைப் பள்ளிகளுக்கும் ரூ.6.27இலட்சம் செலவில் முதலுதவி பெட்டிகள் வழங்கப்படும்.
- சுகாதாரத் துறையின் கீழ் நடத்தப்படும் மருத்துவ முகாம்களுக்கு அனைத்து கோட்டங்களுக்கும் கூடாரம், மேஜை மற்றும் நாற்காலி வாடகை முறையில் அமர்த்தி கொள்ள ரூ.45 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மண்டலம் வாரியாக தேவையின்படி பகிர்ந்து அளிக்கப்படும்.
- 2023-2024-ஆம் ஆண்டில் இந்த ஆண்டு, 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தர அங்கீகாரச் சான்றிதழ்கள், National Quality Assurance Standards (NQAS) என்ற நிறுவனத்திடமிருந்து பெற்று தரப்படும்.
- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்க ரூ.13.3 கோடி ஒதுக்கப்பட்டு இதுவரை ரூ.8.6 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
- அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கேபிடல் அண்ட் ஹோப் அறக்கட்டளையின் பங்களிப்பில் ரூ.3.13 கோடி மதிப்பில் ரூ.6.26 கோடி கோடியில் மாதிரிப் பள்ளிக் கட்டிடம் கட்டப்படும்.
- சென்னை மாநகராட்சிக்கு நமக்குநாமே திட்டத்தில் ரூ.49.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 352 வேலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன; 88 பணிகள் நடைபெற்று வருகின்றன, இந்த ஆண்டு முடிக்கப்படும்.
- 2023-24 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும். இதற்கென ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டு, தனி வழிகாட்டுதல் வெளியிடப்படும்.
- தெருநாய்களைக் கட்டுப்படுத்த ஜி.சி.சி.யால் ரூ.60 லட்சம் மதிப்பில் ஆறு புதிய வாகனங்கள் வாங்கப்படும், மேலும் 2023-2024 ஆம் ஆண்டில் சென்னையில் திரியும் கால்நடைகளைப் பிடிக்க, ரூ.1.35 கோடி மதிப்பில் ஐந்து புதிய வாகனங்கள் வாங்கப்படும்
- மாநகராட்சி பள்ளிகளில் உள்ள அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்களில் தீயை அணைக்கும் கருவிகள் வழங்க ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்
- சாலைகளின் தரத்தை மேம்படுத்த, 2023-2024ல் நகரில் 4,000க்கும் மேற்பட்ட சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
- நகரத்தில் மொத்தம் 584 பூங்காக்கள் நிலையான செயல்பாட்டு நடைமுறையின் அடிப்படையில் மேம்படுத்தப்படும்.
- சென்னையில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த சுகாதார பணியாளர்களுக்கு நவீன வெக்டார் கன்ட்ரோல் கருவிகள் வழங்கப்படும்.
- தண்ணீர் தேங்குவதைத் தடுக்க, முக்கிய நகரப் பகுதிகளில் அதிக மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.
- பள்ளி செல்லும் மாணவர்களையும், பொதுமக்களையும் ஈர்க்கும் வகையில், 2023–2024ஆம் கல்வியாண்டில் அனைத்து சென்னை மாநகரப் பள்ளிகளின் முகப்பிலும் தனித்துவம் வாய்ந்த சென்னைப் பள்ளிகளுக்கான சின்னம் (Logo) அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். மேலும், பள்ளிகளில் பயன்படுத்தப்படும் செய்முறை பயிற்சி ஏடுகள், பதிவேடுகள், சான்றிதழ்கள், அறிக்கை அட்டைகள் போன்றவற்றில் சென்னைப் பள்ளிகளுக்கான சின்னம் பதிக்கப்படும்.
- சிந்தாதிரிப்பேட்டை மற்றும் பெசன்ட் நகர் நவீன மீன் மார்க்கெட் அமைக்கப்படும்.
- சென்னையின் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும், பொது சுகாதாரப் பிரச்னைகளைத் தடுக்கும் வகையில், தனியார் மனைகளின் உரிமையாளர்கள் தங்கள் வளாகத்தை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பை நிர்ணயிக்கும் கொள்கையை குடிமை அமைப்பு செயல்படுத்தும்.
- இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை NULM தொழிலாளர்களுக்கு சுகாதார உபகரணங்கள் மற்றும் ரெயின்கோட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்க ரூ.18.75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியாக, வீடுகளில் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக மஞ்சப்பை விநியோகத்தைத் தொடங்கும் குடிமை அமைப்பு அமைக்கப்படும்.
- அனைத்து நகர சாலைகளிலும் குப்பைகளை பிரித்தெடுக்க தனித்தனி கம்பாக்டர் தொட்டிகளை வைக்க மாநகராட்சி தொடங்கும்.
- சென்னை காவல்துறையின் உதவியுடன் அனைத்து நகர சாலைகளிலும் கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தும்
- சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்கள் அனைவரையும் நான்கு குழுக்களாக அமைத்து அக்குழுக்களுக்கு அரக்கு, பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நான்கு வண்ணங்களில் 28,200 மாணவர்களுக்கு ரூ.85 இலட்சம் மதிப்பீட்டில் டி-சர்ட் வழங்கப்படும்.
- சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பயன்பெற ஷெனாய் நகர் மற்றும் ஆலந்தூரில் புதிய டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்.
- தொண்டியார்பேட்டையில் உள்ள தொற்று நோய்கள் மருத்துவமனையில் உள்ள நகர பொது சுகாதார கண்காணிப்பு அமைப்பு சென்னையில் பொது சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகளை கண்காணிக்கும்.
- நான்முதல்வன் திட்டத்தின் கீழ் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திறமையான ஆசிரியர்களை கொண்டு டியூஷன் வகுப்புகள் நடத்தப்படும்
- கடற்கரையை சுத்தமாக பராமரிக்க ரூ.71.88 கோடி மதிப்பில் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும். குப்பையில்லாமல் தூய்மையாக பராமரிக்கும் வார்டுகளை தேர்ந்தெடுத்து வெகுமதிகள் வழங்கப்படும்.
- சென்னைப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களை பொதுவான தேர்வின் மூலம், தேர்ந்தெடுத்து போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெறும் வகையில் நேரடியாகவும் மற்றும் இணையதளம் வாயிலாகவும் பயிற்சிகள் வழங்கப்படும்.
- சென்னை மாநகராட்சியின் கீழ் மொத்தம் 5,786 நிலங்கள் ஆக்கிரமிப்புகளை கண்டறிய ஆய்வு செய்யப்பட்டு எல்லைகள் நிர்ணயிக்கப்படும்.
- ஒரு ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் 3,000 க்கும் மேற்பட்ட வாகனங்களைக் கண்காணிக்கும் மற்றும் நகரத்தில் பாதுகாப்பு மற்றும் பிற குடிமைச் சேவைகளை மேம்படுத்தும்.
- மாநகராட்சி பள்ளிகளில் பயின்று ஜேஇஇ, க்ளேட், நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு, முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் முழுவதும் மாநகராட்சி செலுத்தும்.
- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10, 12ம் வகுப்புகளில் 100% தேர்ச்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை 1500ல் இருந்து 3,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- மாநகராட்சி உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
- திருக்குறளுடன் அதற்கான விளக்கமும் நாள்தோறும் காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்களை கூறவைத்து தமிழ் பேசும் திறனை மேம்படுத்த இந்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
- சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் “ஸ்நாக்ஸ்” வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நொறுக்கு தீனி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம் நடத்தப்படும்.
- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் உள்ள மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்காக ரூ.11 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு Career Guidance Programme நடத்தப்படும்.
- இசை ஆசிரியர்கள் உள்ள 20 பள்ளிகளுக்கு இசைக்கருவிகள் வாங்க ஒரு பள்ளிக்கு ரூ.25,000 வழங்கப்படும்.
- 1.35 லட்சம் ஏழை மாணவர்கள் பள்ளிப் படிப்பை இடைநிறுத்துவதைத் தடுக்க மாநகராட்சி ஆலோசகர்களை நியமிக்கும்.
- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தினமும் 10 நிமிடங்கள் ‘Happy Class’ நடத்தப்படும். அதில் நன்னெறி பண்புகள் கற்பிக்கப்படும்.
- சர்வதேச விவகாரங்கள் மற்றும் செய்திகளை மாணவர்களுக்கு வெளிப்படுத்த மாநகராட்சி பள்ளிகளில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை நடத்தப்படும்.
- வளர் இளம் பருவத்தில் மாணவர்கள் எதிர்காலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவதன் மூலமே மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். எனவே பிரச்சனைகளுக்கான தீர்வு தேவைப்படும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க அனைத்து மண்டலங்களிலும் ஆலோசகர்கள் ஒரு கல்வி ஆண்டிற்கு ரூ.30 லட்சம் செலவில் பணியமர்த்தப்படுவார்கள்.
- பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முக்கியமான அறிவிப்புகளை அறிவிக்கவும் பள்ளிகளில் அனைத்து பகுதிகளில் உடனடியாக தொடர்பு கொள்வதற்கு வசதியாக சென்னை மாநகராட்சி அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு தளத்திலும் அமைத்து தரப்படும். முதல் கட்டமாக 2023-24 ஆம் கல்வியாண்டில் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.35 லட்சம் செலவில் 70 பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம் அமைத்து தரப்படும். இத்திட்டம் படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்
- அனைத்து சென்னை உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் செய்முறை வகுப்புகளை சிறப்பாக நடத்திட ஆய்வங்களின் உட்கட்டமைப்புகள் படிப்படியாக மேம்படுத்தப்படும். முதற்கட்டமாக 2023-24 ஆம் கல்வியாண்டில் முன்னுரிமை அடிப்படையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 10 மேல்நிலை பள்ளிகளில் ஆய்வங்கள் மேம்படுத்தப்படும்.
சென்னை பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள் மேம்படுத்துதல் :
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப பள்ளிகளில் ஆய்வகங்க உட்கட்டமைப்புகள் மேம்பட வேண்டும். இது மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-24 :
சென்னை மாநகராட்சியின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. மாநகராட்சி மேயர் ப்ரியா, பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதில் சென்னை மாநகராட்சிக்கு 80 புதிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-24 :
தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக அந்தந்த மாமன்றங்களில் பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. சென்னை மாமன்றத்தில் மேயர் பிரியா இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதில் சென்னை மாநகராட்சிக்கு 70க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள், அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.