#ChennaiBudget:வீடற்றவர்கள் தங்குவதற்கு புதிதாக காப்பகங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!
சென்னை:சென்னை மாநகராட்சிகளில் வீடற்றவர்கள் தங்குவதற்கு காப்பகங்கள் அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.சென்னை மேயர் பிரியா தாக்கல் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
- மேலும்,மாணவிகளுக்கு நிர்பயா நிதி திட்டத்தின் மூலம் ரூ.23.66 கோடி செலவில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ.5.47 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.மேலும்,மாநகராட்சி பள்ளிகளில் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் வகையில் பாலின குழுக்கள் அமைக்கப்படும்.
- சென்னையில் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.1.86 கோடியில் இணையதள இணைப்பு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,சென்னை மாநகராட்சியில் வீடற்றவர்கள் தங்குவதற்கு புதிதாக 3 காப்பகங்கள் ரூ.2.40 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
மேலும்,சொத்து வரியை பொதுமக்கள் எளிதாக செலுத்த QR குறியீடு வசதி அறிமுகம் செய்யப்படும்.சென்னை மாநகர் முழுவதும் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்,
சென்னையில் குளங்களை மேம்படுத்தும் பணி,ரூ.143 கோடி மதிப்பீட்டில், இந்திய அரசின் அம்ருட் 2.0 திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.