தமிழகத்தில் உள்ள மிகப்பழமையான மற்றும் பல அறிஞர்களை உருவாக்கிய பல்கலைகழகங்களில் சென்னை பல்கலைகழகம் ஒன்றாகும். இது 1851 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது மிகவும் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இந்த பல்கலைகழகம் லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த பல்கலைகழகம் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி 1857 ஆம் ஆண்டு இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இப்பல்கலைக்கழகம் மத்திய அரசின் பல்கலைகழக மாணிய குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது ஆகும். இந்த பலகலையில் கலை, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம், என அனைத்துத் துறைகளும் இருந்தது. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இப்பொழுது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விட்டன. இத்தகைய பல்கலைகழகத்தின் உயரிய பதவியான துனைவேந்தர் பதவிக்கான இடம் காலியாவதால் அதை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னை பல்கலை கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை தேடல் குழு வெளியிட்டது. துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த விண்ணப்பத்தை www.unom.ac.in என்ற இணையதளத்தில் படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் vcsearchcommittee.unom@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பிவைக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…