சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் ஜனவரி 18-ஆம் தேதி வரை இயக்ககப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
பேருந்துகளில் இருக்ககைகளை www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் நடை திறக்கப்படுகிறது. இதையடுத்து சபரிமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜைக்கான விழா தொடங்குகிறது.
இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த சமயத்தில் கார்த்திகை மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் விரோதம் எடுத்து மலைக்கு சென்று வருவார்கள். இந்த நிலையில், சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவ.17-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழநாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…