நிதியமைச்சர் அறிவிப்பால் புதுப்பொலிவு பெறவுள்ள சென்னை..!
சென்னை பொதுஇடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியபோது, பல துறைகளுக்கு நிதிஒதுக்கீடு குறித்தும், பல திட்டங்கள் குறித்தும் அறிவித்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் சென்னைக்கு சில திட்டங்களை நிதியமைச்சர் தெரிவித்தார். இதனால், சென்னை புதுப்பொலிவு பெற வாய்ப்புள்ளது.
அதன்படி,
- சென்னையில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு அளிக்கப்டும்.
- சுத்தமான மற்றும் பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளித்து சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்.
- சென்னை பொதுஇடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்.
- பாரம்பரியம் கட்டிடங்கள் மற்றும் பொதுஇடங்கள் பொலிவு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
- தற்போது பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் நடைபெறும் உயிரியல் அகழ்ந்தெடுக்கும் பணி விரைவுப்படுத்தப்படும்.
- ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் உதவியுடன் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவாக செயல்படுத்தப்படும்.
- சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மொத்தம் ரூ.2,056 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்தப்படும்.
- சென்னையில் உள்ள நீர்வழிகள் கழிவு நீர் தடுப்பதை தடுக்கும் திட்டம் ரூ.2,371 கோடி செலவில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.
- ஆந்திர பிரதேசத்தில் இருந்து குழாய் வழியாக கிருஷ்ணா நீரை சென்னை நீர்தேக்கங்களுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
- கணேசபுரம் சுரங்கப்பாதை, கொன்னூர் நெடுஞ்சாலை, தெற்கு உஸ்மான் சாலையில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் என தெரிவித்தார்.