8 மாதங்களுக்கு பின் நாளை முதல் தொடங்கும் சென்னை-திருப்பதி ரயில் சேவை .!
8 மாதங்களுக்கு பின் நாளை முதல் சென்னை-திருப்பதி இடையேயான ரயில் சேவை நாளை முதல் தொடங்கவுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது . அதனையடுத்து சில மாதங்களுக்கு முன் ஊரடங்கில் தளர்வு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்க கோரி மாநில அரசு ரயில்வே வாரியத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது .
அதனையடுத்து மாநில அரசின் கோரிக்கையை ஏற்று கொண்ட ரயில்வே வாரியம், சிறப்பு ரயில்களை இயக்க அளித்த ஒப்புதலின் படி,தற்போது 30-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே சென்னை- திருப்பதி இடையே சிறப்பு ரயில் இயக்க கோரி ரயில்வே வாரியத்திடம் வேண்டுகோள் விடுத்தது மாநில அரசு.
அதன்படி தற்போது 8 மாதங்களுக்கு பிறகு சென்னை-திருப்பதி இடையேயான ரயில் சேவையை தொடங்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. வியாழக்கிழமை அதாவது நாளை முதல் சென்னை-திருப்பதி இடையேயான சிறப்பு ரயில் (சப்தகிரி)சேவை தொடங்கவுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலிருந்து காலை 6.25-க்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 9.40 மணிக்கு திருப்பதியை வந்தடையும். அதன் மறுபக்கம் திருப்பதியில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 1.40-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மேலும் இந்த ரயில் திருவள்ளூர், அம்பத்தூர் அரக்கோணம், திருத்தணி ,ஏகாம்பரகுப்பம் , புத்தூர் மற்றும் ரேனிகுண்டா ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நேற்று காலை முதல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று சென்னை-அகமதாபாத் , நாகர்கோவில்-ஷாலிமார் மற்றும் திருவனந்தபுரம்-ஷாலிமார் ஆகிய வழித்தடங்கள் இடையேயும் மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.