நேற்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் உயிரிழந்த மணமகன் ராஜ் என்பவரின் உடல் உறுப்புகளை தனமாக அவரது பெற்றோர் அளித்துள்ளனர்.
சென்னை, திருப்போருர் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் இவரது மனைவி கலா. இவர்களது மகன் தான் ராஜ். இவருக்கு நேற்று திருப்போரூரில் ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், கடந்த 9ஆம் தேதி தான் வேலை பார்த்த தனியார் கல்லூரியில் நண்பர்களுக்கு பத்திரிகை கொடுக்க சென்றவர் சாலை விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமுற்ற ராஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். நேற்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்று முன்தினம் மணமகன் இறந்த செய்தி அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தங்கள் மகன் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டுமே என நினைத்த ராஜ் அவர்களின் பெற்றோர் , ராஜின் உடலுறுப்புகளை தானமாக கொடுத்துள்ளனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…