சென்னையில் உள்ள கிண்டி, மேற்கு மாம்பழம் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு வெளியில் நிற்க வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போய் இருந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் செய்து வந்துள்ளன. இது தொடர்கதையாகவே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதற்காக 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து புருசோத்தமன் என்பவரை கைது செய்தனர். அவர் சைதாப்பேட்டையில் ரயில் நிலையம்அருகே வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். ஆனால், குடிப்பழக்கம் அதிகமானதால் கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்வதில்லை. மாறாக, அவ்வப்போது இருசக்கர வாகனத்தை திருடி, அதனை மதுபான கடையில் இருக்கும் யாருக்கேனும் 1000, 2000 ரூபாய்க்கு விற்பனை செய்துவிடுகிறார்.
இந்த தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர் திருடிய 14 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தற்போது அந்த போதை ஆசாமி சிறையில் உள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…