சென்னை:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக கட்சி நிறுவனருமான எம்.ஜி.ஆர்.அவர்களின் 105 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில்,எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி,சென்னை கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு தமிழக அமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்,அரசு உயர் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில்,எம்.ஜி.ஆர்.மாளிகையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு,நாளை ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,இனிப்பு வழங்க உள்ளார்கள் என்றும்,இந்த நிகழ்ச்சியில்,அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதிமுக தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…
சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…