#Breaking:தமிழகம்,புதுவையில் இயல்பை விட 59% அதிக மழை!

சென்னை:தமிழகம்,புதுவையில் இயல்பை விட 59% அதிக மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகம்,புதுவையில் இயல்பை விட 59% அதிக மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நேற்று வரை பெய்ய வேண்டிய மழை அளவு 45 செ.மீ. என கணித்திருந்த நிலையில்,பெய்த மழை அளவு 71 செ.மீ. அதாவது இயல்பை விட 59% அதிக மழை ஆக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக,விழுப்புரம் மாவட்டத்தில் 119 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆனால்,அங்கு பெய்ய வேண்டிய மழை அளவு 55 செ.மீ. மட்டுமே,ஆனால் பெய்த மழை அளவு 121 செ.மீ. என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக,சென்னையைப் பொறுத்தவரை பெய்ய வேண்டிய மழை அளவு 78 செ.மீ மட்டுமே, ஆனால்,பெய்த மழை அளவு 136 செ.மீ. ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது,இது இயல்பை விட 74 செ.மீ. ஆக பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!
March 31, 2025
தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!
March 31, 2025