சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த ஒரு நபர், நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில், தனது மகள் உட்பட 7 முதல் 10 வயது சிறுமிகள் 3 பேரை அடையாளம் தெரியாத மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த மாதம் 30ஆம் தேதி 4ஆம் வகுப்பு படிக்கும் அப்பகுதி மாணவன் ஒருவன் , குற்றவாளி கூறியதன் பெயரில், சிறுமிகளிடம் சாக்லேட் தருவதாக கூறி அருகில் உள்ள மொட்டை மாடிக்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு அந்த நபர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
சாக்லேட் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.? குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள்.!
ஆனால், அந்த 4ஆம் வகுப்பு மாணவனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தனக்கு தெரிந்த அடையாளங்களை மட்டும் கூறி, அந்த நபரை தனக்கு தெரியாது என்று தெரிவித்து இருந்தான். மாணவன் கூறிய அடையாளங்களை கொண்டு குற்றவாளியை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சாக்லேட் கொடுத்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை பிடிக்க நீலாங்கரை மகளிர் காவல் நிலையம் தரப்பில் இருந்து 3 தனிப்படையினர் அமைக்கப்பட்டனர். தொடர் விசாரணை, சிசிடிவி ஆய்வுகளை தொடர்ந்து, அடையாறு பகுதியில் இருந்த யோவான் (எ) ஜான் எனும் 30வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமிகளிடம் வீடியோ மூலம் விசாரணை மேற்கொண்டு குற்றவாளி யோவான் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நபர் மேலும் சில சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த யோவான், தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற மன உளைச்சலில் இவ்வாறு செய்துவிட்டதாக போலீசார் விசாரணையில் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யோவான் மீது போக்ஸோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…