இன்ஸ்டாகிராமில் உள்ள குறையை கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு 20 லட்சம் பரிசு!
சென்னையை சார்ந்த லக்ஷ்மண் முத்தையா என்ற இளைஞர் தொழில் நுட்ப சார்ந்த துறையில் வேலை செய்து வருகிறார்.அதிலும் குறிப்பாக தொழில் நுட்ப துறையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்ட்ராகிராமில் ஒரு பாதுகாப்பு குறைபட்டை கண்டுபிடித்து உள்ளார்.அதாவது இன்ஸ்ட்ராகிராமில் பயனாளி கணக்குகளை எளிதில் ஹேக் செய்யமுடியும் என கண்டுபிடித்து உள்ளார்.
இன்ஸ்ட்ராகிராம் பயனாளி தனது கணக்கின் பாஸ்வேர்டு மற்றும் போது தேவைப்படும் ரிக்வரி கோட் மூலம் இன்ஸ்ட்ராகிராமில் பயனாளி கணக்குகளை எளிதில் ஹேக் செய்ய முடியும் என லக்ஷ்மண் முத்தையா கண்டுபிடித்து உள்ளார்.
இந்த தகவலை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு லக்ஷ்மண் முத்தையா அனுப்பி வைத்து உள்ளார். லக்ஷ்மண் முத்தையா அனுப்பிய தகவலை ஆராய்ந்து பார்த்த ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த குறைபாட்டை சரிசெய்து உள்ளனர்.
மேலும் லக்ஷ்மண் முத்தையா நன்றி தெரிவித்து 30 ஆயிரம் அமெரிக்க டாலரை பரிசாக கொடுத்து உள்ளனர்.இந்திய மதிப்பில் 20.56 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.