2020-க்கான மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்ற சென்னை இளம்பெண்.!
- மிஸ் தமிழ்நாடு 2020-க்கான என்ற பட்டத்தை சென்னையைச் சேர்ந்த தீப்தி இளம்பெண் வென்றுள்ளார்.
- அவரை தொடர்ந்து காம்னா, லாவண்யா ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தனர்.
சென்னையில் நடைபெற்ற 13-வது மிஸ் தமிழ்நாடு போட்டியில் பல இடங்களில் இருந்து இளம்பெண்கள் பங்கேற்றனர், அதில் பல சுற்றுகளை கடந்து, இறுதி சுற்றுக்கு 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் இறுதியில் மிஸ் தமிழ்நாடு 2020-க்கான என்ற பட்டத்தை சென்னையைச் சேர்ந்த தீப்தி இளம்பெண் வென்றுள்ளார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக, நடிகை யாஷிகா ஆனந்த், உபாசனா ஆர்.சி. ஹரினி, சைதன்யா ராவ், ஜெயஸ்ரீ ஈஸ்வர் உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர். பின்னர் நவநாகரீகமாக உடை அணிந்திருந்த இளம்பெண்கள் மேடையில் ரேம்ப் வாக்கில் ஈடுபட்டு, மூன்று சுற்றுகளின் அடிப்படையில் நடைபெற்ற இறுதிபோட்டியில் மிஸ் தமிழ்நாடு 2020-ஆக தீப்தியை தேர்வு செய்து பட்டத்தை வழங்கினார். அவரை தொடர்ந்து காம்னா, லாவண்யா ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தனர்.