இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் அதிரடியாக மாற்றத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தனது வீரியத்தை அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் ஊரடங்கும் கடுமையாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பேருந்துகள் மற்றும் ரயில் சேவையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக இரவு நேர ஊரடங்கு நேரத்தில் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது போலவே சென்னை மின்சார ரயில் சேவைகளும் இரவு நேரத்தில் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு 10 மணிக்கு மேல் மின்சார ரயில்கள் இயக்கப்பட மாட்டாது எனவும், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் எந்த ரயில் நிலையத்திலிருந்து ரயில் இயக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கில் ஒரு பங்கு அளவிலேயே ரயில்கள் இயக்கப்படும் எனவும், அதிலும் முன் களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே அந்த ஞாயிற்றுக் கிழமைகளில் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வார நாட்களில் 434 ரயில்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் 86 ரயில்களும் மட்டுமே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…