சென்னை சங்கமம்- திருவிழா! மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.!
நம்ம ஊரு திருவிழா “சென்னை சங்கமம்”, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தீவுத்திடலில் தொடங்கிவைத்தார்.
மண்ணின் மைந்தர்களான கிராமியக்கலைஞர்கள் 600 க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெறும் “சென்னை சங்கமம்” நம்ம ஊரு திருவிழா ஜன-13 முதல் ஜன-17 வரை நடைபெறுகிறது. இந்த திருவிழா சென்னை தீவுத்திடல்கள் மற்றும் பூங்கா என 18 இடங்களில் நடைபெறவுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்திருவிழாவை தீவுத்திடலில் தொடங்கி வைத்தார். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த விழாவில் 600 க்கும் மேற்பட்ட கிராமியக்கலைஞர்கள் பங்குபெற்று தங்களது கலைத்திறமையை அரங்கேற்ற உள்ளனர்.