சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டமானது சுமுார் 277.3 கி.மீ. தூரத்திற்கு பசுமை வழிச்சாலை அமைப்பது தான்.
இந்த சாலை சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து சேலம் அருகே உள்ள அரியானூர் வரை இந்த சாலை போடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59.1 கி.மீ. பகுதியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 123.9 கி.மீ. பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கிமீ பகுதியிலும், தருமபுரி மாவட்டத்தில் 56 கிமீ. பகுதியிலும், சேலம் மாவட்த்தில் 36.3 கி.மீ. பகுதி என மொத்தம் 277.3 கி.மீ பகுதியில் இந்த சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சாலை அமைக்கும் பணிக்கு ஏராளமான விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.இதனால் இந்த சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.அரசும் காவல்துறையை வைத்து கடுமையான ஒடுக்குமுறையில் ஈடுபடடன.இந்த சூழலில் மக்கள் , கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தின.போராட்டத்தையும் ஒடுக்கும் விதமாக தமிழக அரசாங்கம் கைது நடவடிக்கைகளை தொடர்ந்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில் சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…