சென்னை- சேலம் 8 வழிச்சாலை பணிகள் இந்த ஆண்டே தொடங்கும் – பட்ஜெட்டில் அறிவிப்பு..!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். “மேட் இன் இந்தியா” டேப்லெட் பயன்படுத்தி சீதாராமன் 2021 பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமானது, ஏனெனில் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் எதிர்பார்ப்பு உள்ளது.
இன்றைய மத்திய பட்ஜெட் தாக்கல் உரையின் போது, சென்னை -சேலம் எட்டு வழி சாலைக்காக பணிகள் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 277 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைக்கான டெண்டர் இந்த ஆண்டு இறுதி செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.