சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் …!நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை …!

Published by
Venu

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை பிறப்பித்ததுள்ளது.

இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  109 மரங்களை வெட்டியதற்கும்  கடும் கண்டனம் தெரிவித்தது.மேலும்  சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஏன் தடை விதிக்க கூடாது ? தனியார் நிலத்தை உட்பிரிவு செய்து அரசு அளித்த அறிக்கையை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

Image result for சென்னை உயர் நீதிமன்றம்8 வழிச்சாலை \

 

அதேபோல் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதன் பின்னர்  சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையை வெள்ளிக்கிழமை(இன்று ) தாக்கல் செய்வதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

இதேபோல்  இன்று மத்திய அரசு இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தனது தரப்பு பதிலை தாக்கல் செய்தது.அதில் சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி 2 வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும் 8 வழிச்சாலை திட்டத்தை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது .அதேபோல் திட்டத்தை இறுதி செய்யும்வரை நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று  மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளது.மறு உத்தரவு வரும் வரை தற்காலிக தடை தொடரும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.இன்று மத்திய அரசு தாக்கல் செய்த சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையில் முரண்பாடுகள் இருந்ததை அடுத்து சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை பிறப்பித்தது.

Published by
Venu

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

49 minutes ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

1 hour ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

1 hour ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

2 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

2 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

3 hours ago