மக்கள் வாழ சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 4-வது இடம்…!
அமைதியாக வாழ்வதற்கு தகுதியான நகரங்களின் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்த சென்னை.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி நேற்று நகராட்சிகளின் செயல்திறன் குறியீடு-2020 மற்றும் அமைதியாக வாழ்வதற்கு தகுதியான நகரங்களின் பட்டியலை வெளியிட்டார். இதில் 10 லட்சம் மக்கள் தொகைக்கும் அதிகமான நகரங்கள், குறைவான நகரங்கள் என தனித்தனியாக பிரித்து அவற்றில் சிறந்த 10 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதில் மக்கள் தொகை பத்து லட்சத்துக்கும் அதிகமாக கொண்ட நகரங்கள் பிரிவில் பெங்களூரு முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை புனே மற்றும் அஹமதாபாத் நகரங்கள் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை 4-வது இடத்தை பிடித்துள்ளது.
வாழ தகுதியான நகரங்கள் பட்டியல், வாழ்க்கை தரம், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.