இந்திய அளவில் GST வருவாய் சேகரிப்பில் சென்னை 3-ம் இடம்.!
அகில இந்திய அளவில் ஜி.எஸ்.டி வருவாய் சேகரிப்பில் சென்னை 3வது இடத்தை பிடித்துள்ளதாக மண்டலிகா சீனிவாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் பேசிய அவர், ஜிஎஸ்டி வருவாய் சேகரிப்பில் 2021-22 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2022-23-ல் 21% அதிகமாக வரி வசூலாகியுள்ளது. அதேபோல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருவாய் 19% அதிகரித்துள்ளது. மூன்று தணிக்கை ஆணையங்கள் மூலம் ரூ.288 கோடி மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஜிஎஸ்டியால் மாநிலங்களின் வருவாய் அதிகரிப்பு:
ஜிஎஸ்டியால் மாநிலங்களின் வருவாய் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் கூறியுள்ளார். ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு இந்தியாவின் மறைமுக வரி அமைப்பு துண்டாடப்பட்டது.
ஒவ்வொரு மாநிலமும் தொழில்துறை, நுகர்வோருக்கு ஒரு தனித்துவமான சந்தையாக இருந்ததாக கூறிய அவர், GSTக்கு முன்பு மாநிலங்களின் வருவாய் பெருக்கம் 0.72 ஆக இருந்ததாக GST-க்கு பின் இது 1.22 ஆக உயர்ந்திருப்பதாகவும் கூறினார்.