சென்னை மழை – போக்குவரத்தின் காலை 6 மணி நிலவரம்..!
சென்னையில் வாணி மஹால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா ஜங்சன் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்த மழை காரணமாக போக்குவரத்தின் காலை 6 மணி நிலவரம் குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்:
i) மெட்லி சுரங்கப்பாதை
ii ரங்கராஜபுரம் இருசக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை
2.மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து மெதுவாக செல்கின்றன.
i) கே.கேநகர் ராஜாமன்னார்சாலை
ii} கே.பி.தாசன் சாலை
iii) TTK 1வது குறுக்கு சந்து
iv) திருமலைபிள்ளை சாலை
v பசூல்லா சாலை
vi பெரியார் பாதை
மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம்:
வாணி மஹால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா ஜங்சன் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில் மழைநீர் தேங்கியுள்ள சுரங்கபாதை மற்றும் சாலைகளில் உள்ள மழைநீரை மோட்டார் பம்ப்செட்கள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் தாங்கள் செல்லும் இடங்களுக்கு தகுந்தாற்போல் சாலைகளை தேர்ந்தெடுத்து கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.