'செலவுக்கு பணம் தரவில்லை அதனால் அடித்து கொன்றோம்!' சென்னை தொழிற்சாலை முதலாளி கொலையில் திடுக் திருப்பம்!
சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு சிறிய பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளார் பிரபாகரன். இவர், அந்த தொழிற்சாலையை 10 ஆண்டுகளாக நடத்திவந்துள்ளார். இவருக்கு கடந்தாண்டு திருமணம் ஆகி 4 மாத குழந்தை உள்ளது.
இவர் எப்போதும் தனது தொழிற்சாலைக்கு வந்த பின் மனைவியிடம் போன் பேசுவது வழக்கம். ஆனால் சமத்துவதன்று அவர் போன் செய்யவில்லை. அன்று இரவு வீட்டிற்கும் வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த பிரபாகரன் வீட்டார். போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பின்னர் தொழிற்சாலைக்கு வந்த போலீசார், பூட்டியிருந்த தொழிற்சாலையை பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பிரபாகரன் கம்பியால் தாக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு அங்குள்ள சிசிடிவி காமிராவை ஆராய்ந்ததில் தொழிற்சாலையில் இருந்து இருவர் தப்பிஓடுவது போல இருந்த்தது. இதனை அடுத்து தப்பியோடியவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் சில நாட்களுக்கு முன்னர்தான் வேலைக்கு சேர்ந்தனர் என்பது தெரியவந்தது.
பின்னர் அவர்களை பீகார் சென்று தமிழ்நாடு காவல்துறை கைது செய்தது. பின்னர் அவர்களிடம் விசாரித்ததில் ‘ பிரபாகரனிடம் செலவுக்கு பணம் கேட்டதாகவும், அவர் தர மறுத்ததால், இரும்பு கம்பியால் அவரை தாக்கி கொன்றுவிட்டு, அவரிடம் இருந்து 500 ரூபாயையும், செல்போன், பீரோவில் இருந்த 1 லட்சம் பணம் என அனைத்தையும் கொள்ளையடித்து சென்றதாகவும்’ வாக்குமூலத்தில் தெரிவித்தனர். அந்த கொலையாளிகளில் ஒருவன் பெயர் ரோஷன், இன்னொருவன் 17 வயது பையன் ஆவான்.