சென்னை, தாம்பரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் பயின்று வந்துள்ளார் மாணவர் முகேஷ். இவர் தனது நண்பர் விஜயை பார்க்க சென்னையை அடுத்த வேங்கடமங்கலத்தில் இருக்கும் விஜயின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது விஜய் வீட்டில் முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.. இதில் முகேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் முகேஷை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு அங்கிருந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு முகேஷ் கொண்டுசெல்லப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு முகேஷை கொண்டுசென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே மாணவர் முகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக தாழம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து முகேஷின் நண்பர் விஜய் மற்றும் இன்னொரு நபர் வேங்கடமங்கலத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஆதலால் அவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
முதற்கட்டமாக முகேஷின் சகோதரர்கள் இருவரை அழைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வேங்கடமங்கலத்தில் உள்ள விஜய் வீட்டின் அருகே இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…