கடந்த 5ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முகேஷ் தன் நண்பர் விஜயால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கியது.
இந்த சம்பத்தில் தேடப்பட்டு வந்த விஜய் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் போலீசார் விசாரணையில் உள்ளார்.
இது குறித்து, தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னையின் புறநகர் பகுதியாக கருதப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட தாழம்பூர், கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம், காயார் என சுற்றுவட்டார பகுதிகளில் வெளியூர் வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கும், படிப்பிற்க்காகவும் வரும் இளைஞர்கள் அப்பகுதிகளில் தங்குகின்றனர்.
அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் கும்பல்கள் அந்த பகுதியில் அதிகம். அதில் அவர்களுக்குள் நடக்கும் யார் பெரியவன் என்கிற சண்டைகளில் தற்போது கள்ளத்துப்பாக்கிகளின் பயன்பாடு அதிகமாகி வருகிறது. இந்த கள்ளத்துப்பாக்கி விவகாரம் மாணவர் முகேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த கும்பலில் முக்கியமான இரு கேங்குகளில் ஒன்று நெடுங்குன்றம் சூர்யா இன்னொருன்று பெருமாட்டுநல்லூர் செல்வம்.. இதில் சரணடைந்த விஜய் பெருமாட்டுநல்லூர் செல்வம் கேங்கை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. சரணடைந்த விஜய், இதற்க்கு முன்னர் 2017ஆம் ஆண்டு ஒரு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…