பணியிலிருந்த சென்னை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!

Default Image

உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் வீட்டில் இருக்க சொன்னாலும், காவலர்கள் அனைவருமே ரோட்டில் தான் நிற்கின்றனர். இந்த காவலர்களுக்கு சரியான பாதுகாப்பு மறைவிடம் கிடைப்பதில்லை.

மக்களுக்காக தன்னலம் மறந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தற்போது சென்னை மயிலாப்பூரில் பணியில் இருந்த அருண் காந்தி எனும் இளம் வயது போக்குவரத்துக்கு காவலர் ஒருவர் நேற்று மதியம் 3. 15 மணி அளவில் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து அப்பகுதியில் பெரும் சோகம் நிலவியுள்ளது. இந்நிலையில், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவலரின் மறைவிற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, ஊரடங்கு காலத்தில் பணியாற்றக்கூடிய காவலர்களுக்கு பணிச்சுமையும் மன அழுத்தம் ஏற்படாத வகையில் தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்