ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ஏ1, ஏ2, ஏ3 என 3 முக்கிய குற்றவாளிகள் இவர்கள் தான்..,

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

K Armstrong Murder case

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி சென்னையை அடுத்த பெரம்பூரில் அவரது வீட்டருகே ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.  தேசிய கட்சியின் மாநில தலைவர், தலைநகர் சென்னை அருகே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 28 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ரவுடி திருவேங்கடம் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனை அடுத்து இதே வழக்கில் தேடப்பட்டு வந்ததாக கூறப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் ,  சீசிங் ராஜா வேறொரு வழக்கில் பிடிக்கப்பட்டார் என காவல்துறை விளக்கம் கொடுத்தது.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை தற்போது காவல்துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன் பெயர் A1 (Accused no 1) என சேர்க்கப்பட்டுள்ளது.

2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்தில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 3வது குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன் மகனும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் சேர்க்கப்பட்டுள்ளார்.  இந்த வழக்கில் சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் தமிழ்நாடு காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள அனைவரது மீதும் ஜாமீனில் வெளியே வரமுடியாதபடி குண்டர் தடுப்பு சட்டம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live 05.11.2024
Donald Trump
PM Modi - Hindus Attack
MK Stalin - Mudhalvar Marunthagam
Trump Vs Kamala
lightning during a match
Nivetha Pethuraj