சென்னையில் பரவிய போலி சான்றிதழ்கள்.! 31 வழக்கு… 25 பேர் கைது.! டிஜிபி விளக்கம்
போலி பல்கலைக்கழக சான்றிதழ்கள், பள்ளி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறுபோலி சான்றிதழ் தொடர்பாக வழக்குகள் தொடர்ந்து பதியப்பட்டு வந்தான. இந்த வழக்கு விசாரணையில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் குறித்து இன்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
பற்களை பிடுங்கிய விவகாரம்.! பல்வீர் சிங்கிற்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமீன்.!
அப்போது, திவாகர், ரோகேஷ் எனும் இருவர் இதில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படுகின்றனர். அவர்கள் வெவ்வேறு பெயர்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்,வெளிமாநில பல்கலை கழகங்கள், உள்ளூர் பள்ளிக்கூடங்கள் வரையில் பல போலி கல்வி சான்றிதழ்களையும் தயாரித்து வந்துள்ளனர். போலியாக பிறப்பு சான்றிதழ்கள், போலி இறப்பு சான்றிதழ்கள், போலி ஆதார் உள்ளிட்ட பல்வேறு போலி சான்றிதழ்களை தயாரித்து வந்துள்ளனர்.
ஆந்திர பிரதேசத்தில் ஹரி பிரசாத் என்பவரிடம் பல்வேறு சான்றிதழ்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளார்கள். போலி சான்றிதழ் வழக்குகள் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள். இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 31 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 33.73 லட்ச ரூபாய் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.