சென்னையில் ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ், பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
சென்னையில் ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ், பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். மேலும், 181 என்ற இலவச எண்ணில் உதவி மையத்தில் பெண்கள், சிறார்கள் ஆலோசனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆணையர் சங்கர் ஜிவால், ‘நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதியில் இருந்து 55 லட்சம் ரூபாய் இந்த உதவி மையத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மையத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்க சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூகநலத் துறை உதவியுடன் இந்த உதவி மையம் செயல்படும் என்றும் , பெண் வன்கொடுமை, வரதட்சணை, குழந்தை திருமணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றும், பெண்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 - 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல்…
பிலடெல்பியா : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபிலாடெல்பியா நகரில் இருந்து சிறிய ரக…
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. 1 சவரன் தங்கம் விலை கடந்த…
சென்னை : 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மக்களவையில் காலை 11 மணிக்கு…
புனே : நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனை…