#BREAKING: ஹெல்ப்லைன் எண்ணை அறிவித்த சென்னை காவல்துறை..!
ஊரடங்கு காலத்தில் உதவியும் தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவ சென்னை காவல்துறை 14 நாட்களுக்கு 24 * 7 உதவி மையத்தை அமைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் வருகின்ற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகர போலீசார் சார்பில் கொரோனா உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையிலான உதவி மையத்தை தொடர்பு கொள்ள 9498181236, 9498181239 ஆகிய தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொரோனா ஊரடங்கு காலத்தில் அவசரத் தேவைகளுக்கு 9498181236, 9498181239 ஆகிய எண்களில் அழைக்கலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. தடையற்ற ஆக்சிஜன் டாங்கர் போக்குவரத்து, ஆக்சிஜன் சிலிண்டர்கள் போக்குவரத்திற்கு அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியாக வசிக்கும் முதியோருக்கு உதவி தேவைப்பட்டால் இந்த எண்களில் அழைக்கலாம் எனவும் அத்தியாவசிய பொருள்கள், ரெம்டெசிவர் மருந்து போக்குவரத்தில் தடை ஏற்பட்டால் இந்த எண்ணை அழைக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெல்ப்லைன் எண்: 9498181236, 9498181239.