சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த லிப்சா எனும் பெண் தனது தோழியுடன் நடந்து தேனாம்பேட்டையில் நடந்து செல்கையில் ஒரு திருடன் பல்சர் பைக்கில் வந்து லிப்சாவின் போனை திருடி சென்றான். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் சிசிடிவி கேமிராவை ஆராய்ந்த போலீசார், அந்த செல்போன் பறிப்பு சம்பவத்தில் உபயோகப்படுத்திய பல்சர் பைக் திருட்டு பைக் என தகவல் கிடைத்தது. பின்னர் அந்த பைக்கில் இன்னொரு பெண் இருந்ததும் கண்டறியப்பட்டது. அந்த பெண் அத்திருடனின் காதலி என கண்டறியப்பட்டது.
மேலும், அவர்கள் சைதாபேட்டை லாட்ஜில் தங்கியிருந்ததும் தெரிந்தது. பின்னர் சைதை சுற்றியுள்ள லாட்ஜில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது திருடன் ராஜுவும், அவனது காதலி ஸ்வேதாவும் போலீசில் பிடிபட்டனர். ராஜு மீது ஏற்கனவே பல திருட்டு புகார்கள் உள்ளதும் பின்னர் தெரியவந்தது. ஸ்வேதா கரூரை சேர்ந்தவர் என்பதும் சென்னை கல்லூரியில் பயின்று வருகிறார் என்ற தகவலும் கிடைத்தது.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…