#TodayPrice:பெட்ரோல்,டீசல் விலையில் இன்று மாற்றமில்லை – ஆனால் ஒரு லிட்டர் விலை இதுதான்!
சென்னை:இன்று பெட்ரோல்,டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும்,பெட்ரோல் டீசல் விலை யை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவது வாகன ஓட்டிகளுக்கு பேரிடியாக உள்ளது.
நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.