வந்தாரை வாழவைக்கும் சென்னை என தமிழகம் மட்டுமல்லாது உலக மக்களில் சென்னையை நன்கு அறிந்தவர்கள் கூட சொல்லி விடுவார்கள். அவ்வளவு வேகமாக இயங்கி வருகிறது சென்னை.
இவ்வளவு பெருமை மிக்க சென்னையை தற்போது வரை தமிழகத்தில் பெரும்பாலானோர் மெட்ராஸ் என்று தான் அழைத்து வருகின்றனர். தமிழ்நாட்டை தாண்டி வடமாநிலங்களுக்கு நாம் செல்கையில் அவர்கள் தமிழர்களை மதராஸி எனவே தற்போது வரை அடையாளப்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு சென்னை நம் வாழ்வில் ஓர் அங்கம் வகிக்கிறது.
சென்னை என்ற பெயர் 1996இல் வைக்க பட்டாலும், மெட்ராஸ் என்கிற பெயர் எப்படி வந்தது என ஒரு சின்ன பிளாஷ்பேக்கில் பார்ப்போம். அந்த பிளாஸ்பேக்கில் இரண்டு கதைகள் உள்ளன
அதில் முதலாவதாக கூறப்படுவது, சென்னையில் முதலில் மீனவர்களும், கத்தோலிக்க பாதிரியார்களும் இருந்து வந்த காலகட்டம் அது. அப்போது கத்தோலிக்க மக்களின் தலையாரி என அழைக்கப்படுபவரின் மகன் பெயர் மதராசன். இதனால் தான் வசிக்கும் ஊரின் பெயருக்கு தனது மகனின் பெயரை வைக்க எண்ணி மதராசபட்டினம் என வைத்ததாக ஒரு கூற்றும்,
இன்னொர் கதையாக , தற்போதைய சாந்த்தோம் பகுதியில் போர்ச்சுக்காரர்கள் வசித்து வந்தனர். அங்கு ஓர் செல்வாக்கு மிக்க அழகிய பெண் வசித்து வந்தார் அவள் பெயர் மாத்ரா. இவள் தான் பிரான்சிஸ் டேவின் காதலி. ஆதலால் தனது காதலியின் நினைவாக மதராஸ் என பெயர் சூடியதாகவும் கூறப்படுகிறது.
இது போக இன்னோர் வரலாறு என்னவெனில், சென்னை எக்மோர் அந்த நேரத்தில் பெரிய ஆறு, அந்த ஆறுக்கும் கூவம் ஆறுக்கும் இடையில் உள்ள பகுதி சந்திரகிரி ராஜா வம்சத்தின் வசம் இருந்தது. அப்போது அந்த பகுதியை சந்திரகிரி ராஜா அரசின் கீழ் ஆண்டு வந்த நாயக்கர்தான் தர்மாலா சகோதரர்கள். இவர்களிடம் இடத்தை வாங்க பேரம் பேசப்பட்டது. அவர்கள் இடத்தை தருகிறோம். ஆனால், எங்கள் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை வைக்க வேண்டும் என கூறினார். அதனால் அந்த பகுதியை மட்டும் சென்னா பட்டணம் என அழைத்தனர்.
பிறகு தான் இந்த இரு பகுதிகளும் ஒன்று சேர்க்கபட்டு, மதராஸ்பட்டினம் என அழைக்கப்பட்டது. அதனை வெள்ளைக்காரர்கள் மெட்ராஸ் என அழைக்க தொடங்கினர்.
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…