சென்னை முட்டுக்காடு பகுதி, சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது, இதில் சுற்றுலாத்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில், சென்னை முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ள 30 ஏக்கர் தீவுப் பகுதியை, கடற்கரை சுற்றுலாத்தலமாக மேம்படுத்தும் வகையில் ரூ.5 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த முட்டுக்காட்டு பகுதியில் அமைந்துள்ள 30 ஏக்கர் தீவுப்பகுதியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்தும் பணியில், சாகச விளையாட்டுகள், நடைபாதைகள், பறவைகளை பார்வையிடுவதற்கான இடம் என பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் கூறியுள்ளார்.
ரமந்தபுரத்தில் உள்ள தனுஷ்கோடியிலும், பல்வேறு சுற்றுலா வசதிகளுடன் ரூ.5 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் எனவும் சுற்றுலாத்துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…