Michaung Cyclone : வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை வெகுவாக பாதித்தது. மழை பெய்து 6 நாட்கள் கடந்தும் இன்னும் சென்னை புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்ற ஊழியர்கள் முயற்சித்து வருகின்றனர். அங்குள்ள மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கே மிகுந்த சிரமத்திற்குள்ள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் மிக்ஜாம் புயல் – மழைநீர் பாதிப்பு குறித்து , மாநகராட்சி நிர்வாகம் தரவுகளை வெளியிட்டுள்ளது . அதன்படி, கடந்த அக்டோபர் 21 முதல் டிசம்பர் 8 வரையில் சென்னை மாநகராட்சியில் 1136.85 மிமீ மழையளவு பதிவாகியுள்ளது . 8.12.2023 முதல் 9.12.2023 வரையில் 0.85 மிமீ மழையளவு பதிவாகியுள்ளது.
புயல் பாதிப்பு நிவாரணம்.! வங்கி கணக்கு எண்ணை அறிவித்த தமிழக அரசு.!
ரெட்ஹில்ஸ், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய நீர்நிலைகள் முழுதாக நிரம்பி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வந்ததது. மொத்தமாக சென்னை மாநகராட்சியில் 363 இடங்களில் தண்ணீர் தேங்கியது. அதில் 328 இடஙக்ளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு விட்டது . மீதம் வடசென்னையில் 14 இடங்கள் , தென் சென்னையில் 21 இடங்கள் என மொத்தமாக 35 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது .
மிக்ஜாம் புயலில் 1512 மரங்கள் விழுந்துள்ளன. 1302 மரங்கள் அகற்றப்பட்டு விட்டன. 210 மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மொத்தம் 22 சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கி இருந்தது. அவை தற்போது அகற்றப்பட்டுள்ளது. மொத்தம் 1178 மோட்டார் பம்புகள் இயக்கத்தில் உள்ளன. 110 ஜேசிபி எந்திரங்கள் இயக்கத்தில் உள்ளன.
இன்று 748 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில் 52751 பேர் பயனடைந்துள்ளனர். மொத்தமாக 12713 ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2337 வெளியூர் ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். 39 மீட்பு படகுகள் செயல்பாட்டில் உள்ளது. 14,598 பால் பாக்கெட்டுகள், 2,62,608 பிரெட் பாக்கெட்கள், 63,615 பால் பவுடர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…