நாளை முதல் வழக்கம் போல இயங்குகிறது சென்னை மெட்ரோ.! நேரம் – வழித்தட முழு விவரம்!
நாளை (17.10.2024) முதல் வார நாள் அட்டவணையின் படி, சென்னை மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வார நாள் அட்டவணையின் படி, வழக்கம்போல் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, பச்சை வழித்தடத்தில் புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ இரயில்சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் சேவை நேரம்:
முதல் மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ ரயில் அனைத்துமுனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்கு புறப்படும்.
அதில், காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணிமுதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
மேலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை:
- பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
- நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
- நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல்அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வழக்கம் போல் இயக்கப்படும்
சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் நாளை(17.10.2024) முதல் வார நாள் அட்டவணையின் படி வழக்கம்போல் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து…
— Chennai Metro Rail (@cmrlofficial) October 16, 2024