சென்னை மெட்ரோ நிலையங்களில் பயணசீட்டு வழங்கும் இயந்திரம் பழுது! இலவசப் பயணத்தால் மக்கள் மகிழ்ச்சி!
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண சீட்டு வழங்கும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6 மணியளவில், பயணசீட்டு வழங்கும் இயந்திரத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறையும் சரிசெய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.