தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 4 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு, ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி, திருப்பூர் மற்றும் கடலோர மாவட்டங்கள், அதையொட்டியுள்ள உள்மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !
February 12, 2025![israel](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/israel.webp)
LIVE : தமிழக அரசியல் நிகழ்வுகள் முதல்…சாம்பியன்ஸ் ட்ராஃபி அப்டேட் வரை!
February 12, 2025![live today news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/live-today-news.webp)