சென்னை ரிப்பன் மாளிகையில் தேசிய கொடியை ஏற்றிய மேயர் பிரியா.! பள்ளி மாணவர்கள் வீரநடை.!
சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா தேசிய கொடியை ஏற்றினார். அப்போது சாரண சாரணியர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
இன்று இந்தியா முழுவது 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் தமிழக அரசு சார்பில் சென்னை, மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் – ஆளுநர் ஆர்.என்.ரவி : இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்துகொண்டனர். ஆளுநர் ரவி தேசிய கொடியை ஏற்றினார். அதே போல தமிழகமெங்கும், அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் வழக்கம் போல அந்தந்த மாவட்ட மேயர்தேசிய கொடியை ஏற்றினர்.
மேயர் பிரியா : அதே போல, சென்னையில், மேயர் பிரியா , சென்னை ரிப்பன் மாளிகையில் தேசிய கொடியை ஏற்றினார். அதற்கு முன்னதாக மாநகராட்சி பள்ளியின் தேசிய மாணவர் படை மற்றும் சாரண சாரணிய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு சென்னை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தார்.